/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை தருவதில்லை' கட்சியினருடன் வெளியேறிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,
/
'அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை தருவதில்லை' கட்சியினருடன் வெளியேறிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,
'அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை தருவதில்லை' கட்சியினருடன் வெளியேறிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,
'அரசு நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை தருவதில்லை' கட்சியினருடன் வெளியேறிய பா.ம.க., - எம்.எல்.ஏ.,
ADDED : டிச 30, 2025 05:42 AM
இண்டூர்: இண்டூரில், மத்திய கூட்டுறவு வங்கியின், 44வது புதிய கிளை திறப்பு விழாவில், உரிய மரியாதை இல்லையென தொண்டர்கள் கொந்தளிப்பால், பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் வெளியேறினார்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே இண்டூரில், தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், 44வது புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, பா.ம.க., - -எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணி உட்பட, தி.மு.க., - பா.ம.க., நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.இதில், வங்கி துவக்க விழா காலை, 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவித்த நிலையில், 10:00 மணி வரை அதிகாரிகள், அரசியல் கட்சியினர் என, ஒவ்வொருவராக வந்தனர். தொடர்ந்து, 10:30 மணி ஆகியும் நிகழ்ச்சி தொடங்காதது குறித்து, எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தி.மு.க., - எம்.பி., மணி வந்தவுடன் தொடங்கப்படும்' என, தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி விழா மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால், விழா மேடையில் உள்ள பேனர் மற்றும் அழைப்பிதழில், பா.ம.க., - எம்.எல்.ஏ., பெயர் இல்லை. இந்த அவமானம் தேவைதானா, அழையா விருந்தாளியாக வந்ததால்தான், இந்த அவமானம் என, பா.ம.க., தொண்டர்கள் கொந்தளித்தனர்.
அதுவரை, தி.மு.க., - எம்.பி., வருகைக்காக அமைதியாக காத்திருந்த எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் தொண்டர்கள் கோபத்தில் பொங்கியதால், வேறுவழியின்றி, நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அங்கிருந்து வெளியேறினார். இதனால், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். இதையடுத்து அங்கு வந்த, தி.மு.க., - எம்.பி., மணி குத்துவிளக்கேற்றி. மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டத்தில், அரசு விழாக்களில், தி.மு.க.,வினர் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துவதால், அதுபோன்ற நிகழ்ச்சிகளில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விடுகின்றனர்.
இது குறித்து, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், ''தி.மு.க., ஆளுங்கட்சி அதிகாரத்தால், தொகுதி எம்.எல்.ஏ., என்றும் பாராமல், அவமரியாதை செய்கின்றனர்.
அதிகாரிகளும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு ஆட்டம் போடுகின்றனர். அரசு நிகழ்ச்சியை, தி.மு.க.,வின் கட்சி நிகழ்ச்சியாக நடத்துவது தவறு. நேற்றைய நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க, தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்தனர். எனவே, ஆளும் கட்சியின் அதிகார போக்கிற்கு துணை போகும் அதிகாரிகளை கண்டித்து, வங்கி திறப்பு விழாவை புறக்கணித்தேன்,'' என்றார்.

