/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை
/
போலீஸ் ஸ்டேஷன் பா.ம.க.,வினர் முற்றுகை
ADDED : டிச 02, 2025 02:44 AM
பாலக்கோடு, பாலக்கோடு அருகே, சொன்னம்பட்டியை சேர்ந்தவர்கள் சுனில்குமார், 19, முருகன், 20. இருவரும் கடந்த, 27 அன்று, பைக்கில் ஹெல்மெட் அணியாமல் பாலக்கோடு அடுத்த சிக்காராதஹள்ளி பாலம் அருகே சென்றபோது, சாலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்து, இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இவர்களின் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, அவர்களது உறவினர்கள் கடந்த, 28 அன்று பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மேலும் அனுமந்தபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விபத்தில், 2 இளைஞர்கள் பலியானது தொடர்பாக நேற்று, பாலக்கோட்டை சேர்ந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரிக்க போலீசார் அழைத்து சென்றனர். இதனிடையே நேற்று, பா.ம.க., மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கட்சியினர் பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், டி.எஸ்.பி., ராஜசுந்தரம், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

