/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கண்களில் கறுப்பு துணி கட்டி மா.திறனாளிகள் போராட்டம்
/
கண்களில் கறுப்பு துணி கட்டி மா.திறனாளிகள் போராட்டம்
கண்களில் கறுப்பு துணி கட்டி மா.திறனாளிகள் போராட்டம்
கண்களில் கறுப்பு துணி கட்டி மா.திறனாளிகள் போராட்டம்
ADDED : டிச 02, 2025 02:44 AM
அரூர், அரூர் இந்தியன் வங்கி எதிரில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர், கண்களில் கறுப்புத்துணி கட்டி நேற்று போராட்டம் நடந்தது. வட்டத்தலைவர் காந்தி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, வட்ட செயலாளர் வேலாயுதம் ஆகியோர் பேசினர்.
போராட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை மத்திய அரசு உயர்த்தி வழங்குவதுடன், அதை அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். ஆந்திரா அரசு தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம், 6,000 ரூபாய், கடும் ஊனமுற்றோருக்கு, 10,000 ரூபாய், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 15,000 ரூபாயாக வழங்கி வருகிறது. எனவே, ஆந்திரா மாநிலத்தில் வழங்குவது போல், தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

