/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு
/
பெண்ணிடம் அத்துமீறல் வாலிபர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 01:26 AM
பாலக்கோடு, பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, 28 வயது பெண், பெற்றோர் இறந்து விட்ட நிலையில் தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மாரவாடி அருகே காமராஜ் நகரில் வசித்து வரும் மினிசரக்கு லாரி டிரைவர் நவீன்குமார், 24, என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, நவீன்குமார் அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என, ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசில் பெண் அளித்த புகார்படி, இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான நவீன்குமாரை தேடி வருகின்றனர்.