UPDATED : நவ 07, 2026 07:51 PM
ADDED : நவ 07, 2026 07:47 PM
பாப்பிரெட்டிப்பட்டி: பள்ளி மாணவியரிடம் சீண்டலில் ஈடுபட்ட தொழிலாளி பாவேந்தன், 48, கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த, 10 மற்றும் 12 வயதுடைய, 5 மாணவியர், 6 மற்றும், 7ம் வகுப்பு படிக்கின்றனர். தினமும் வீட்டிலிருந்து, ஒரு கி.மீ., தொலைவிலுள்ள பள்ளிக்கு நடந்து சென்று வருவது வழக்கம்.
நவ., 4ம் தேதி மாலை, பள்ளி முடிந்து மாணவியர் வீடு திரும்பியபோது, அந்த வழியாக அதிகாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாவேந்தன், 48, பைக்கில் வந்துள்ளார். அவர் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.
மாணவியினரின் பெற்றோர், பாவேந்தனிடம் கடந்த, 5ம் தேதி கேட்டுள்ளனர்.
அப்போது, ‘அப்படிதான் செய்வேன்’ எனக்கூறி, அவர்களையும் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அரூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார், பாவேந்தனை போக்சோவில் நேற்று கைது செய்தனர்.
