/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்தவர் மீது போக்சோ
ADDED : அக் 30, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமியை திருமணம்
செய்தவர் மீது போக்சோ
தர்மபுரி, அக். 30-
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஊர்நல அலுவலராக பணிபுரிபவர் சாந்தி, 58. இவருக்கு கிடைத்த தகவலின்படி, கடந்த, 22 அன்று பாலக்கோடு அடுத்த, மாரண்டஹள்ளி அருகே உள்ள திருமல்வாடியில் விசாரணை மேற்கொண்டார். அதில், சுதாகர், 34 என்பவர், 17 வயது சிறுமியை கடந்த ஏப்., 15 அன்று திருமணம் செய்துள்ளதும், சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதும் தெரிந்தது. இது குறித்து அவர், மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போக்சோ மற்றும் இளம்வயது குழந்தை திருமணம் என, இரு பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.