ADDED : அக் 22, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, நாடு முழுவதும், பணியின் போது பல்வேறு சம்பவங்களில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அக்., 21ல் அஞ்சலி செலுத்தும் வகையில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள, காவலர்
நினைவு துாணுக்கு, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், துப்பாக்கி குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்பிரமணியம், ஸ்ரீதரன் மற்றும் டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல் படைத்தலைவர், எஸ்.ஐ.,க்கள் உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.