/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்
/
தி.மு.க., நிர்வாகி மீது போலீசில் புகார்
ADDED : ஜன 22, 2026 07:10 AM
தொப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில், இரு தரப்பினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஆடியோ வெளியிட்ட, தி.மு.க., நிர்வாகி மீது நடவடிக்கை கோரி, தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில், ஜருகு கிராமத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஜருகு கிராமத்தை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி செல்வம் அவரின் மொபைல்போன் உரையாடல் ஆடி-யோவை ஒரு மாதத்திற்கு முன் வைரலாக்-கினார். அதில் மற்றொரு தரப்பை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகியின் ஜாதி பெயரை சொல்லி திட்டி, ஆபாச வார்த்தைகளால் இழிவுபடுத்தும் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன. இது, அத்தரப்பு மக்களை அவமானப்படுத்தும் வகையில் இருந்-தது. இதனால், இரு தரப்பு மக்களிடையே வெறுப்பு மற்றும் பதற்றம் ஏற்படும்
நிலை உள்-ளது. இது குறித்து, கடந்த ஜன., 11ல் அவரிடம் கேட்டபோது, அவர், ஜாதி பெயரை சொல்லி திட்டி மிரட்டினார். எனவே, அவர் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து, தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் செல்வத்-திடம் கேட்டபோது அவர், ''நான் யாரையும் ஜாதி பெயரை சொல்லி திட்டவில்லை, ஆடியோ-வையும் வெளியிடவில்லை. நான் ஆடியோவை வெளியிட்டிருந்தால், போலீசார் என் மீது வழக்-குப் பதிந்து நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு நான் ஒத்துழைப்பதாக, தொப்பூர் போலீசில் தெரி-வித்துள்ளேன். நான் எந்த தவறும் செய்ய-வில்லை. ஒரு சிலர், பழைய காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு செயல்படுகின்றனர்,'' என்றார்.

