/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
14 டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு போலீசார் எப்.ஐ.ஆர்., வழங்க இழுத்தடிப்பு
/
14 டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு போலீசார் எப்.ஐ.ஆர்., வழங்க இழுத்தடிப்பு
14 டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு போலீசார் எப்.ஐ.ஆர்., வழங்க இழுத்தடிப்பு
14 டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருட்டு போலீசார் எப்.ஐ.ஆர்., வழங்க இழுத்தடிப்பு
ADDED : ஆக 30, 2025 01:08 AM
அரூர், தீர்த்தமலை பகுதியில், 14 டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருடப்பட்ட புகாரில், போலீசார் எப்.ஐ.ஆர்., வழங்காததால் மாற்று டிரான்ஸ்பார்மர் அமைக்க முடியாமல் மின்வாரியத்தினர் தடுமாறி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகாவிற்கு உட்பட்ட உடையானுார், சிட்லிங், தீர்த்தமலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் கடந்த, மே மாதம் முதல், ஜூலை வரை, 14 டிரான்ஸ்பார்மர்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடங்கள், மலைகள், வனப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களை குறி வைத்த மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரை ஆப் செய்துவிட்டு, திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
டிரான்ஸ்பார்மர்களில் காப்பர் கம்பிகள் திருடு போனதை அடுத்து, அதிலிருந்த விவசாய மின்இணைப்புகளை அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் மின்வாரியத்துறையினர் இணைத்துள்ளனர். இதனால் டிரான்ஸ்பார்மரில் அதிக லோடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தாலோ அல்லது பழுது ஏற்பட்டாலோ உயரதிகாரிகளுக்கு பைல் அனுப்பி உடனடியாக மின்வாரியத்தினர் சீரமைத்துவிடுவர். ஆனால், டிரான்ஸ்பார்மரில் திருட்டு சம்பவம் நடந்தால், போலீசில் புகார் அளித்து, அவர்களிடமிருந்து, எப்.ஐ.ஆர்., பெற்று உயரதிகாரிகளுக்கு பைல் அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். இதனிடையே டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள் திருட்டு போனது குறித்து மின்வாரியத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்த போதிலும், 5 புகாருக்கு மட்டும் சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், எப்.ஐ.ஆர்., வழங்கப்படவில்லை. இதனால், காப்பர் கம்பிகள் திருடு போன டிரான்ஸ்பார்மர்களுக்கு மாற்றாக, புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்க முடியாமல் மின்வாரியத்தினர் தடுமாறி வருகின்றனர். புதிதாக ஒரு டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்கு, 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறப்
படுகிறது.
இது குறித்து அரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அழகுமணி கூறுகையில், ''டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பிகள் திருட்டு போனது குறித்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் ஆன்லைனில் புகார் அளித்துள்ளோம். ஆனால், போலீசார் எப்.ஐ.ஆர்., கொடுக்கவில்லை.
எப்.ஐ.ஆர்., கொடுத்தால் தான் நாங்கள் மாற்று டிரான்ஸ்பார்மர் அமைக்க எஸ்டிமேட் தயாரிக்க முடியும். எங்கள் துறை விதிமுறைப்படி, எப்.ஐ.ஆர்., வாங்க வேண்டும். இது குறித்து டி.எஸ்.பி., மற்றும் எஸ்.பி.,க்கு கடிதம் எழுதியுள்ளோம்,''
என்றார்.

