/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெட்ரோலுடன் வந்தவர் மீது போலீசார் வழக்கு
/
பெட்ரோலுடன் வந்தவர் மீது போலீசார் வழக்கு
ADDED : மார் 05, 2025 08:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமையில், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்னைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்து செல்கின்றனர்.
இதில், தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா, நரிப்பள்ளியை சேர்ந்த அருள், 38, என்பவர், கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் சோதனை செய்ததில், பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து, ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.