/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற தாய் உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசார்

ADDED : டிச 11, 2024 01:29 AM
தர்மபுரி, டிச. 11-
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீ கடை அருகே, நேற்று முன்தினம் மாலை, 2 குழந்தைகள் நீண்ட நேரமாக தனியாக சுற்றித்திரிந்தனர். அங்கு வந்த தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் அங்குள்ள, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, 2 குழந்தைகளை பெண் ஒருவர் மருத்துவமனையில் விட்டுச் சென்றது தெரிந்தது.
குழந்தைகளிடம் அவரது தாய் மற்றும் உறவினர்கள் குறித்து கேட்டறிந்தபின், உறவினர்களை வரவழைத்து போலீசார் விசாரணை செய்தனர். இதில், சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த புஷ்பராஜ், 30, இவரது மனைவி நந்தினி, 24 ஆகியோரின் குழந்தைகள் ராகவ ஸ்ரீ, 6, மற்றும் முகேஷ், 3 என தெரிந்தது. கருத்து வேறுபாடால் தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று முன்தினம் ஓமலுாரிலிருந்து, தர்மபுரி வந்த நந்தினி, அரசு மருத்துவமனையில், 2 குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து, தர்மபுரி மாவட்டம், கெட்டுஹள்ளியை சேர்ந்த, நந்தினியின் உறவினர்களிடம், குழந்தைகளை ஒப்படைத்த போலீசார், குழந்தைகளை விட்டு சென்ற நந்தினி குறித்து விசாரித்து வருகின்றனர்.