/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
10 ஆண்டுக்கு பிறகு பொம்மிடிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
/
10 ஆண்டுக்கு பிறகு பொம்மிடிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
10 ஆண்டுக்கு பிறகு பொம்மிடிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
10 ஆண்டுக்கு பிறகு பொம்மிடிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமனம்
ADDED : செப் 07, 2025 01:05 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில், புதிய இன்ஸ்பெக்டராக மஞ்சுநாதன் நேற்று பொறுப்பேற்றார்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடி போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 10 ஆண்டுகளாக இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர்களால், இந்த ஸ்டேஷன் கவனிக்கப்பட்டு வந்தது.
இதனால் சட்ட ஒழுங்கு பிரச்னை, கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரச்னைகளில், விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பொம்மிடிக்கு புதிய போலீஸ் இன்ஸ்பெக்டராக கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்த மஞ்சுநாதன், பதவி உயர்வு பெற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.
இவர் நேற்று காலை பொறுப்பேற்றார். அவருக்கு ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பத்துாரை சேர்ந்த மஞ்சுநாதன், 2011ல், எஸ்.ஐ.,யாக தேர்வு பெற்று மேட்டூரில் பணியை துவக்கி சேலம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில், 10க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றி வந்துள்ளார். பொம்மிடிக்கு, 10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கபட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.