/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பட்டாசு குடோன்களில் போலீசார் சோதனை
/
பட்டாசு குடோன்களில் போலீசார் சோதனை
ADDED : ஜன 13, 2025 02:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துாரிலுள்ள பட்டாசு குடோன்களில், தர்மபுரி ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமையில், அரூர் டி.எஸ்.பி., கரிகால்பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் சுகுமார், உள்ளிட்ட போலீசார் திடீரென சோதனை செய்தனர்.
இதில், பட்டாசு குடோன்களின் உரிமம், மருந்துகள் இருப்பு, விற்பனை செய்த ரசீது மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பட்டாசு கடை நடத்துப-வர்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.பொங்கலை முன்னிட்டு பட்டாசுகள் வாங்கிச் செல்லும் நபர்-களின் விபரங்கள் பதிவு செய்ய வேண்டும். பட்டாசு வாங்கி சென்று, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தினர். இதே போன்று, அரூர் சப்- டிவிஷனில் நடந்தது.