/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆன்லைன் மோசடியை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
/
ஆன்லைன் மோசடியை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜூன் 01, 2025 01:38 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில், ஆன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் சதீஷ் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். தர்மபுரி அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக தர்மபுரி நான்கு ரோட்டில் நிறைவடைந்தது. இதில், கல்லுாரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு
பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் பேசியதாவது: தினமும் பல்வேறு வகை நுாதன மோசடிகள் நடந்து வருகிறது. இது குறித்து பொதுமக்கள் தெரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மொபைலில் தேவையில்லாத, 'ஆப்' மற்றும் அவசியமில்லாத மெசேஜ்களுக்கு பதில் கூறுவதால் வரும் சிக்கல்களை உணரவேண்டும். அதுபோன்ற மெசேஜ்கள் வந்தால், 1930 என்ற சைபர் கிரைம் எண்ணிற்கோ,
www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார்
அளிக்கலாம்.
இணையதள பண பரிவர்த்தனை, சமூக வலைதளங்களை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட வங்கி விபரங்களை பகிரக்கூடாது. டாஸ்க் கம்ப்ளீட் ஜாப், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம், கூரியரில் பொருட்கள் வந்துள்ளது என, பல்வேறு முறையில் மோசடிகள் நடக்கின்றன. அதைப்பற்றி தெரிந்து கொண்டு, விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, கூரியரில் போதை பொருள் கடத்தியதாக, மும்பை போலீஸ் போல் பேசி ஏமாற்றி, 22.40 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, தர்மபுரியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் சைபர் கிரைமில் புகார் அளித்தார். இவ்வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஜெய்ப்பூரை சேர்ந்த பைரவா, 23, என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மீட்கப்பட்ட, 22.40 லட்சம் ரூபாயை, ஜெயக்குமாரிடம் போலீசார்
ஒப்படைத்தனர்.