/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நகைக்கடையில் கொள்ளை முயற்சி தொடர் சம்பவத்தால் போலீஸ் அதிர்ச்சி
/
நகைக்கடையில் கொள்ளை முயற்சி தொடர் சம்பவத்தால் போலீஸ் அதிர்ச்சி
நகைக்கடையில் கொள்ளை முயற்சி தொடர் சம்பவத்தால் போலீஸ் அதிர்ச்சி
நகைக்கடையில் கொள்ளை முயற்சி தொடர் சம்பவத்தால் போலீஸ் அதிர்ச்சி
ADDED : அக் 28, 2025 01:54 AM
இண்டூர், தர்மபுரி அருகே முகமூடி கும்பல் அடுத்தடுத்து கைவரிசை காட்டியுள்ளது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே அ.செக்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன், 40. இவர், செக்கரப்பட்டி கிராமத்தில், 'திருச்செந்துார்' என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். கடந்த, 23 அன்று கடையை வழக்கம் போல் பூட்டிச்சென்றார். அன்றிரவு, 11:57 மணிக்கு அவரின் மொபைலுக்கு அலர்ட் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. இதையடுத்து அவர் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையில் இருந்த அலாரம் மற்றும் 'சிசிடிவி' கேமரா ஆகியவற்றின் ஒயர்களை துண்டித்து விட்டு, கடையில் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. புகார் படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல், நேற்று முன்தினம் அதிகாலை அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகே இருந்த நகைக்கடை பூட்டை உடைத்து, கொள்ளை முயற்சி நடந்தது. அலாரம் ஒலித்ததால், கொள்ளையர்கள் தப்பினர். மேலும், இண்டூர் அடுத்த சோம்பட்டியில் பஞ்., செயலர் சம்பத்குமார் வீட்டில், 43 பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, 25,000 ரூபாய் திருட்டு போனது. முகமூடி கும்பல் அடுத்தடுத்து கைவரிசை காட்டியுள்ளது, போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த இரு சம்பவங்களிலும் சிவப்பு நிற காரில், முகமூடி அணிந்து வந்த கும்பல் அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராக்கள் மீது கறுப்பு ஸ்பிரே அடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. எனவே மேற்கொண்ட மூன்று சம்பவங்களிலும், கொள்ளையில் ஈடுபட்டது ஒரே கும்பலா, அல்லது வெவ்வேறு கும்பல், ஒரே சமயத்தில் கைவரிசை காட்டினார்களா என, தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

