/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : ஜன 10, 2025 01:15 AM
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கம்
தர்மபுரி, :தர்மபுரி மாவட்டம் சொமாண்டகுப்பத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி நேற்று பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில்,'' மாவட்டத்திலுள்ள, 4.71 குடும்பங்களுக்கு, 5.32 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாட்களில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை வாங்கிச் செல்லலாம்,'' என்றார்.
நிகழ்ச்சியில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை மேலாண்மை இயக்குனர் மலர்விழி, டி.ஆர்.ஓ., காயத்ரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தேன்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

