/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை
/
அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை
ADDED : மே 08, 2024 04:57 AM
நல்லம்பள்ளி : தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மன்றோ கனவாய் வீர ஆஞ்சநேயர் கோவிலில், சித்திரை மாத அமாவாசையையொட்டி நேற்று காலை, ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்கால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சுவாமிக்கு புஷ்பங்கி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், எஸ்.வி.,ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில், மொடக்கேரி ஆற்று ஆஞ்சநேயர் கோவில், அன்னசாகரம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில், சித்திரை மாத அமாவாசையையொட்டி நேற்று, ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடந்தன.

