/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை
/
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூஜை
ADDED : ஜூலை 17, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பைநல்லுார், தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் வி.புதுாரில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 21.35 லட்சம் ரூபாய் மதிப்பில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள் செல்வம், தனபால், ராமஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அதே ஊரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை மாணவ, மாணவியர் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ., சம்பத்குமார் துவக்கி வைத்தார்.