ADDED : டிச 17, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, டிச. 17-
நல்லம்பள்ளி அருகே, தனியார் கல்லுாரி முதல், குடிபட்டி வழியாக சேவன்கொட்டாய் வரை, 3.4 கி.மீ., நெடுஞ்சாலையை ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தில், 3.5 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டது.
தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்க டேஷ்வரன் நேற்று பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அருணா, பாலஜங்கமனஹள்ளி பஞ்., தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

