/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு
/
பெண் குழந்தைகளுக்கு அஞ்சல் சேமிப்பு கணக்கு
ADDED : டிச 02, 2025 02:43 AM
பாப்பிரெட்டிப்பட்டி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., சார்பில் பொம்மிடி பகுதியை சேர்ந்த, 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, 250 ரூபாய் செலுத்தி, புதிய அஞ்சல் மற்றும் சேமிப்பு கணக்கு புத்தகங்கள் வழங்கும் விழா பொம்மிடி தனியார் மண்டபத்தில் நடந்தது.
இது 400 குழந்தைகளுக்கு எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, புதிய அஞ்சல் மற்றும் சேமிப்பு கணக்கு புத்தகங்களை வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நல்லதம்பி, ஒன்றிய செயலாளர்கள் சேகர் முருகன், மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரிய கண்ணு இடும்பன், இளையராஜா உள்ளிட்ட கட்சியின் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

