/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டிச., 13ல் 'நேஷனல் லோக் அதாலத்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு
/
டிச., 13ல் 'நேஷனல் லோக் அதாலத்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு
டிச., 13ல் 'நேஷனல் லோக் அதாலத்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு
டிச., 13ல் 'நேஷனல் லோக் அதாலத்' பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ADDED : டிச 02, 2025 02:42 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், டிச., 13 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம், 'லோக் அதாலத்' நடக்க உள்ளதாக, முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய தலைவருமான திருமகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட அளவில் நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி, டிச., 13 அன்று 'நேஷனல் லோக் அதாலத்' நடக்கவுள்ளதை முன்னிட்டு, டிச., 1 முதல் டிச., 12 வரை அனைத்து வேலை நட்களிலும் சிறப்பு நீதிமன்ற அமர்வு அந்தந்த மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் மதியம், 2:00 மணிக்கு மேல் நடக்கவுள்ளது. சிறப்பு நீதிமன்ற அமர்வை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில், டிச., 13 காலை, 10:00 மணிக்கு 'நேஷனல் லோக் அதாலத்' நடக்கும்.
இதில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சமரசம் செய்து கொள்ளகூடிய மோட்டர் வாகன விபத்து வழக்கு, காசோலை மோசடி, வங்கி வாராக்கடன், தொழிலாளர் நல வழக்கு ஆகிய வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக்கை முடித்து கொள்ளலாம். வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றிற்கு விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று, தர்மபுரி நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு அலுவலகங்களில் லோக் அதாலத் குறித்து, முதன்மை மாவட்ட நீதிபதி திருமகள், கூடுதல் மாவட்ட நீதிபதி மோனிகா, தலைமை குற்றவியல் நீதிபதி முகம்மது ரிஸ்வானுல்லா ஷெரிப், முதன்மை சார்பு நீதிபதி ஞனபாலகிருஷ்ணன், சட்ட பணிகள் ஆணையத்தின் செயலர் தமயந்தி உட்பட குற்றவியல் நீதிபதிகள், வக்கில்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு லோக் அதாலத் குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

