/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
/
சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
சட்டசபை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
ADDED : டிச 11, 2025 06:42 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, வெள்ளாளப்பட்டி பஞ்.,ல் பல்-வேறு கோரிக்கைகள் குறித்து, மனு அளித்தும் நடவடிக்கையை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து, வரும் சட்ட-சபை தேர்தலை புறக்கணிப்பதாக, போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி பஞ்., கிராம மக்கள் சார்பில், நேற்று தர்மபுரி நகர பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.அதில், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்-திடம் கடந்த, 3 ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. வெள்ளாளப்பட்டி பஞ்., நத்தம் கிராம வழியாக கோணங்கிநாயக்கனஹள்ளி அரசு பள்-ளிக்கு
செல்லும் தார்ச்சாலை இருபுறமும் ஆக்கி-ரமிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சாலை வழியாக செல்லும், 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் உயிருக்கு அரசு உத்தர-வாதம் கொடுக்குமா, என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து, போஸ்டர் ஒட்டிய வெள்ளாளப்பட்-டியை சேர்ந்த சனத்குமார் ஆறு பாசன விவசா-யிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறு-கையில்,''சனத்குமார் ஆற்றின் குறுக்கே கட்டப்-பட்டுள்ள பாலம் சேதமடைந்துள்ளது. இது குறித்து, கடந்த, 3 ஆண்டுகளாக தமிழக அரசு மற்றும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தில் மனு அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் அறிவிப்பதற்குள் நடவடிக்கை இல்லை எனில், அனைத்து கிராம மக்களும் சேர்ந்து, நிச்சயமாக சட்டசபை தேர்தலை புறக்க-ணிப்போம்,'' என்றார்.

