/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போக்குவரத்துக்கு இடையூறான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
போக்குவரத்துக்கு இடையூறான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
போக்குவரத்துக்கு இடையூறான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : டிச 10, 2025 10:17 AM

இண்டூர்: இண்டூரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த, சாலை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் நேற்று அகற்றினர்.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்-துக்கு உட்பட்ட இண்டூரில், தர்மபுரி -- ஒகேனக்கல் செல்லும் பிரதான நெடுஞ்சாலை உள்ளது. இச்-சாலை வழியாக, அதிகளவிலான சுற்றுலா பய-ணிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், இண்டூர் பகுதியில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால், அவ்-வப்போது போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி
அடைந்து வந்தனர். விபத்து மற்றும் போக்குவரத்து நெரி-சலை தடுக்க, நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு-களை அகற்றி, சாலையை அகலப்படுத்த, வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சீனிவாசன் அறிவுறுத்தலின் படி, உதவி பொறியாளர் அருணா தலைமையில், நேற்று இண்டூர் பகுதியிலுள்ள, தர்மபுரி - ஒகே-னக்கல், இண்டூர் - பாப்பாரப்பட்டி, இண்டூர் - நாகர்-கூடல் உள்ளிட்ட சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்-புகளை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்-றினர். சாலை விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, இண்டூர் பகுதி முழுவதுமாக நடக்கும். இனி, சாலை ஆக்கிரமிப்புகளில் ஈடுபடு-பவர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

