ADDED : டிச 22, 2024 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், டிச. 22-
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கடந்த, 2010ல், 39.50 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டப்பட்ட சிறு விளையாட்டு அரங்கை, அப்போதைய துணை முதல்வரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். அதில், காலை மற்றும் மாலையில் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் என ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.
மைதானத்தில், 2ல் ஒரு மின்விளக்கு எரிவதில்லை. அதிகாலை, இரவில் நடைபயிற்சி மேற்கொள்வோர் போதிய வெளிச்சமின்றி, இருட்டில் நடந்து செல்கின்றனர். பராமரிக்காததால், சுற்றுப்பகுதிகளில் புதர் மண்டியும், விஷ ஜந்துகள் நடமாடும் பகுதியாகவும்
மாறி வருகிறது.