/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
/
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED : ஆக 21, 2025 01:52 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், கீழ்பூரிக்கல்லில் உள்ள பெரியநாயகி உடனமர் கைலாசநாதர் கோவிலில் மூலவர் மற்றும் பிரகாரத்திலுள்ள நந்திக்கு, நேற்று ஆவணி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள் பாலித்தார். அதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனீஸ்வரர் கோவில், கடைவீதி மருதவனேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில், அதியமான்கோட்டை சோமேஷ்வரர், சோளேஷ்வரர் உட்பட மாவட்டத்தில் உள்ள, பல்வேறு சிவன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள வர்ணீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நந்திக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல், அரூர் சந்தைமேட்டில் உள்ள வாணீஸ்வரர் கோவில், பொம்மிடி அருணாச்சல ஈஸ்வரன் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தென்கரைகோட்டை நஞ்சுண்டேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடந்தது.