/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மோளையானுார் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
/
மோளையானுார் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
மோளையானுார் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
மோளையானுார் அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
ADDED : ஜூன் 14, 2024 01:27 AM
பாப்பிரெட்டிப்பட்டி, -
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சிறந்த பள்ளிகளுக்கு, காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த பள்ளிகளாக தேர்வாக கல்வி, மாணவர் சேர்க்கை, புரவலர்கள், மாணவர் சேர்க்கை, விளையாட்டு, தன்னார்வலர்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, உள்ளிட்ட, 33 வகையான பிரிவுகளில் சிறந்து விளங்கும் பள்ளிகளை, அதிகாரிகள் தேர்வு செய்கின்றனர்.
அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் அரசு உயர் நிலைப் பள்ளியில் தற்போது, 150 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கடந்த, 12 ஆண்டுகளாக தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில்,100 சதவீத தேர்ச்சி, விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் பங்கேற்பு உள்ளிட்டவைகளாலும், 33 பிரிவிலும் மாவட்ட அளவில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது.
இதனால், இப்பள்ளிக்கு, 2023ம் ஆண்டுக்கான காமராஜர் விருது, இதனுடன், 75,000 ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா நேற்று தலைமை ஆசிரியர் அசோக்குமாரிடம் வழங்கினார். விருது பெற்றமைக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்களை, பி.டி.ஏ., தலைவர் சின்னழகு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுஜிதா, பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.