/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
/
லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
ADDED : அக் 30, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பூர், பெங்களூருவில் இருந்து பெருந்துறைக்கு சோளம் லோடு ஏற்றிய லாரியை, திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த பூமிநாதன், 57, என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று காலை, 9:30 மணிக்கு தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார் மற்றும் ஹீரோ பேஷன் புரோ பைக் மீது மோதியது. இதில், பைக்கில் சென்ற சேலம் மாவட்டம், ஓமலுாரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மதியழகன், 38, என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

