ADDED : ஜூலை 19, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி:தர்மபுரி அருகே, வி.ஜெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஹேப்பி பியூலா, 36. இவர் தர்மபுரியில் உள்ள, தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கணவர், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் ஹேப்பி பியூலா மாயமானார். இது குறித்து, அவரது கணவர் செல்வகுபேர் அளித்த புகார்படி, தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.