/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
15ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : பிப் 12, 2025 07:04 AM
தர்மபுரி: தர்மபுரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 15ல் நடக்க உள்ளது. தர்மபுரி அடுத்த சோகத்துார் பஞ்., ல் உள்ள தனியார் (தொன்போஸ்கோ) கல்லுாரியில் முகாம் நடக்க உள்ளது. இதில், உற்பத்தி, தகவல், தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளிலிருந்து, 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். இவர்கள், 5,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
அன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கவுள்ள இம்முகாமில், 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, dpijobfair2025@gmail.com என்ற இணைய முகவரி மற்றும் 04342 - 288890 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

