/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
/
16ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மே 14, 2025 01:48 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும், 16ல் (வெள்ளிக்கிழமை) காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.
இதில் கிருஷ்ணகிரி, ஓசூரை சேர்ந்த முன்னணி தனியார் துறை நிறுவனங்கள், ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் பிளஸ் 2 தேர்ச்சி, பட்டதாரிகள், பட்டயபடிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் என அனைத்து விதமான கல்வி தகுதியினரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.