/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கியாளர்களுக்கான திட்ட விளக்க பயிற்சி
/
வங்கியாளர்களுக்கான திட்ட விளக்க பயிற்சி
ADDED : ஆக 23, 2024 04:47 AM
பாலக்கோடு: பாலக்கோடு பி.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தர்மபுரி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், வட்டார அளவிலான வங்கியாளர்க-ளுக்கு திட்ட விளக்க பயிற்சி, கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில், சிறுதானியங்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்த, சிறுதானிய கையேட்டை மகளிர் சுய உதவி குழு உறுப்பி-னர்களுக்கு அவர் வழங்கினார். கடன் நிலுவை விண்ணப்பங்-களை உடனடியாக பரிசீலனை செய்து, தகுதியான நபர்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) சவுந்தர்யா, கார்த்திகா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் சந்தோசம், தாசில்தார் ரஜினி, பி.டி.ஓ., ரேணுகா மற்றும் அரசுத்துறைஅலுவலர்கள் உடனிருந்தனர்.

