/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.19 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.19 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : பிப் 16, 2026 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா, எம்.செட்டிஹள்ளி கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப் லைன் அமைக்கும் பணிக்கு, 9.11 லட்சம் ரூபாய், பாலம்பட்டிதோப்பு கிராமத்தில் ரேஷன் கடை அமைக்க, 9.97 லட்சம் ரூபாய் என மொத்தம், 19.08 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு,
பாலக்கோடு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன், பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.இதில், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

