/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வங்கி ஊழியர் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 01, 2025 01:43 AM
சேலம், தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிராம வங்கி அலுவலர் சங்க மாநில தலைவர் ஆண்டோ தலைமை வகித்து பேசுகையில், ''வங்கிக்கடனை வசூலிக்க சென்ற ஊழியரை, டி.பெருமாபாளையம், பள்ளிப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன், தனது மகனுடன் சேர்ந்து கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். புகார் அளிக்க வீராணம் போலீசுக்கு சென்ற போது, போலீசார் முன்பாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கிய போலீசார், சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், வங்கி ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்,'' என்றார். இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளன மாநில செயலர் ஹரிராவ், மாவட்ட செயலர் தீனதயாளன், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர்கள் வெங்கடபதி, தியாகராஜன், உதயகுமார், வக்கீல் பொன்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

