/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாரதிபுரம் சிவன் கோவிலில் அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு
/
பாரதிபுரம் சிவன் கோவிலில் அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு
பாரதிபுரம் சிவன் கோவிலில் அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு
பாரதிபுரம் சிவன் கோவிலில் அரச மரத்தை வெட்ட எதிர்ப்பு
ADDED : மே 29, 2024 07:37 AM
தர்மபுரி : பாரதிபுரம் சிவன் கோவிலில் உள்ள, அரச மரத்தை வெட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து, பாரதிபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தர்மபுரி மாவட்டம், பாரதிபுரம் பகுதியில் நெடுஞ்சாலை அருகே, 60 ஆண்டு காலமாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோவிலின் முன் ஒரு அரசமரம் உள்ளது. இதை பக்தர்கள் வழிபட்டு வந்த நிலையில், இதன் அருகே உள்ள மருத்துவமனை நிர்வாகத்தினர், கோவில் முன்புள்ள அரச மரத்தை அகற்ற, ஆர்.டி.ஓ., மூலமாக அனுமதி பெற்றதாக எங்களுக்கு, வி.ஏ.ஓ., மூலம், தெரியவந்தது. எனவே, மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, நாங்கள் கடவுளாக வணங்கும் அரச மரத்தை அகற்றுவதற்காக அளித்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்தனர்.