/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து தர்ணா
/
ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து தர்ணா
ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து தர்ணா
ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து தர்ணா
ADDED : செப் 24, 2025 01:45 AM
தர்மபுரி :தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், துப்புரவு மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு சென்னையை சேர்ந்த, தனியார் நிறுவனம், 450 ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்துள்ளது.
இவர்களுக்கு மாதந்தோறும் தாமதமாக ஊதியம் வழங்குவதாக பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது. மாதம், 5ம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்க, ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இம்மாத ஊதியத்தை (செப்.16) வரை வழங்காகததை கண்டித்து, ஒப்பந்த பணியாளர்கள் கடந்த, 16 அன்று பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, மாதந்தோறும் விரைவாக ஊதியம் வழங்க பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, 408 பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்ட நிலையில், 42 பேருக்கு ஊதியம் வழங்கபடவில்லை. இதை கண்டித்து, நேற்று பணியாளர்கள் பணியை புறக்கணித்து, தர்ணாவில் ஈடுபட்டார்.