/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மக்கள் தொடர் போராட்டம்
/
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மக்கள் தொடர் போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மக்கள் தொடர் போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: மக்கள் தொடர் போராட்டம்
ADDED : நவ 25, 2024 01:38 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதை அகற்றக்கோரி கடை முன், பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அதிகாரிகள் இடம் மாற்ற முயற்சித்து வருகின்றனர். தொடர்ந்து, கதிரிபுரத்தில் அமைக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பொம்மிடி கோட்டமேடுவை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்க புதிய கட்டடம் கட்டப்-பட்டது. இதற்கு கோட்டமேடு, சாலவளசு, குமரிமடுவு கிரா-மங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் கடந்த, 22ல் கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, டாஸ்மாக் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் பொம்மிடி ஊராட்சியில் நடந்த, கிராம சபை கூட்-டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், டாஸ்மாக் கடையை கோட்டைமேடுவில் அமைக்க, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், எந்நே-ரமும் மதுபாட்டில்களை கடைக்கு கொண்டு வரக்கூடும் என கருதி நேற்று முன்தினம் இரவு, 50க்கும் மேற்பட்ட ஆண்கள் அப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி போராட்டத்தில் ஈடுபட்-டனர். நேற்று காலை முதல் தொடர் போராட்டத்தில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.