/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
துாய்மை பணியாளர்கள் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
துாய்மை பணியாளர்கள் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 15, 2025 03:08 AM
தர்மபுரி, சென்னையில், துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, சி.பி.ஐ.எம்.எல்., மற்றும் ஏ.ஐ.சி.சி.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், நேற்று தர்மபுரியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சி.பி.ஐ.எம்.எல்., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஏ.ஐ.சி.சி.டி.யூ., மாநில செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணை தலைவர் மணி, உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் ஆகியோர், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். இதில், கடந்த, 13 நாளாக சென்னை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் போராடி வந்த நிலையில், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாமல், தமிழக அரசு, நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்ததை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.