/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் போராட்டம்
/
கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் போராட்டம்
கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் போராட்டம்
கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு அ.தி.மு.க.,வினர் போராட்டம்
ADDED : நவ 19, 2024 01:43 AM
கொடி கம்பம் அமைக்க எதிர்ப்பு
அ.தி.மு.க.,வினர் போராட்டம்
அரூர், நவ. 19-
அரூர் அடுத்த அச்சல்வாடியில், மின்வாரிய அலுவலகம் அருகில், தி.மு.க., - அ.தி.மு.க., கொடி கம்பங்கள் இருந்தன. கடந்த லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதி காரணமாக அதை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
தேர்தல் முடிவுக்கு பின், தி.மு.க.,வினர் தங்களது கொடி கம்பத்தை மின்வாரிய அலுவலக நுழைவாயில் முன் அமைத்தனர். இந்நிலையில் மின்வாரிய அலுவலகம் அருகில், கொடி கம்பம் அமைக்க மின் கம்பிகள் மற்றும் அலுவலகம் இடைஞ்சலாக உள்ளதாக கூறி, பஸ் ஸ்டாப் அருகில், புதிதாக கொடி கம்பம் அமைக்க, அ.தி.மு.க.,வினர் பீடம் அமைத்தனர். நேற்று காலை, 10:00 மணிக்கு அங்கு வந்த வருவாய்த்துறையினர், இங்கு கொடி கம்பம் அமைக்க அனுமதியில்லை எனவும், பீடத்தை அகற்றுமாறும் கூறினர்.
இதனால், அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் தலைமையில், அரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி மற்றும் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர், தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர், கொடி கம்பம் அமைக்க அனுமதி இல்லை, 2 நாட்களில் அகற்ற வேண்டும். மீறினால் இடிக்க நேரிடும் என எச்சரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த, அ.தி.மு.க.,வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், அ.தி.மு.க.,வினர், 1:30 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.