/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கடைக்காரர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி மறியல்
/
கடைக்காரர் மீது தாக்குதல் நடவடிக்கை கோரி மறியல்
ADDED : ஆக 28, 2025 01:11 AM
பாப்பிரெட்டிப்பட்டி, மொபைல்போன் கடைக்காரரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி, பையர்நத்தத்தில், 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில்
ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அடுத்த கதிரி
புரத்தை சேர்ந்தவர் ராசுக்குட்டி, 25. இவர் பையர்நத்தத்தில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு முன் நின்று, பயர்நத்தம் கிராமத்தை சேர்ந்த வேலன், 25, உள்ளிட்ட சிலர் பேசிக் கொண்டிருந்தனர். 'கடை முன் நின்று ஏன் சத்தம் போடுகிறீர்கள்' என, ராசுக்குட்டி கேட்டதால், வாய்த்தகராறில் ஈடுபட்ட வேலன், பின் கடையின் முன்னால் நிறுத்தியிருந்த பைக்கை அடித்து நொறுக்கி, கடையையும்
சேதப்படுத்தி, ராசுகுட்டியை தாக்கியுள்ளார்.
இதையடுத்து ராசுகுட்டி யின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர் பையர்நத்தத்தம் பஸ் ஸ்டாப்பில், சாலையில் அமர்ந்து, ராசுக்குட்டியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் மற்றும் போலீசார்,
மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.