/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
/
விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 05, 2025 01:47 AM
நல்லம்பள்ளி, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்துள்ள சேசம்பட்டி பஸ் ஸ்டாப் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில், சேசம்பட்டி பிரிவு சாலையில் விபத்து ஏற்பட்டதால், பிரிவு சாலை அடைக்கப்பட்டு, அங்கிருந்து, 500 மீட்டர் தொலைவிலுள்ள குடிப்பட்டி பாலம் வரை அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலை, பிரதான போக்குவரத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சர்வீஸ் சாலையை, நல்லம்பள்ளி, பாகலஹள்ளி, ஏலகிரி, பாலஜங்கமனஹள்ளி ஆகிய, 4 பஞ்.,களை சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பிரிவு சாலை அடைக்கப்பட்ட இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். பாலம் இல்லாததால், சாலையை சுற்றிவராமல் கனரக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் சென்று வருகின்றனர். இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு இதுவரை, 7 பேர் விபத்தில் இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே, சர்வீஸ் சாலையில் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சேசம்பட்டி பிரிவில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று, கிராம மக்கள் குடிப்பட்டி பாலம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த பாளையம் சுங்கச்சாவடியின் திட்டத்தலைவர் நரேஷ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர்மட்ட பாலம் அமைக்கும் கோரிக்கை குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

