/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கோரி மறியல்
/
தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கோரி மறியல்
ADDED : ஜூன் 16, 2025 03:35 AM
தொப்பூர்: நல்லம்பள்ளி அருகே, ஜருகு கொம்புகுட்டையை சேர்த்தவர் மணிகண்டன், 28. தனியார் நிறுவன ஊழியர். நேற்று தன் உற-வினரான, 15 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் பாளையம்புதுார் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு திரும்பினர். மதியம், 2:30 மணிக்கு, பெங்களூரு- - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாளையம்புதுார் பிரிவு சாலையை கடக்க நின்றபோது, பெங்க-ளுருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ஹூண்டாய் ஐ20 கார், பைக் மீது மோதியதில், இருவரும் படுகாயமடைந்தனர்.
தொப்பூர் போலீசார் மற்றும் பாளையம் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர் இருவரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவம-னைக்கு அனுப்பினர்.பாளையம்புதுார் பிரிவு சாலையில், மேம்பாலம் இல்லாததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்வதால், அந்த இடத்தில், உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர, பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததை கண்டித்து, அப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடு-பட்டனர்.
அவர்களிடம், தர்மபுரி ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியம், டி.எஸ்.பி.. சிவராமன், தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, நல்லம்பள்ளி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர், 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மறியல் கைவிடப்-பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.