/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுண்டம்பட்டி அந்தோணியார் ஆலய நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
/
சுண்டம்பட்டி அந்தோணியார் ஆலய நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
சுண்டம்பட்டி அந்தோணியார் ஆலய நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
சுண்டம்பட்டி அந்தோணியார் ஆலய நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 22, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அடுத்த சுண்டம்பட்டி அந்தோணியார் ஆலயத்தின் பயன்பாட்டிற்காக வாங்கிய நிலத்தை, கப்புச்சின் சபை பாதிரியார்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி, அப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள், 50க்கும் மேற்பட்டோர், மதலைமுத்து என்பவர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், சுண்டம்பட்டி கிராமத்தில், 620 கிறிஸ்தவ மக்கள் வசிக்கிறோம். எங்கள் ஊரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓரமாக புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. கடந்த, 1998 முதல், 2013 வரை, 15 ஆண்டுகள் எங்கள் ஆலயத்தை திருச்சியை தலைமை இடமாக கொண்ட கப்புச்சின் சபை பாதிரியார்கள், தர்மபுரி மறை மாவட்ட ஆயரின் அனுமதியுடன் நிர்வாகம் செய்தனர். அப்போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக கோவில் நிலம் சிறிதளவு சென்றது. இட நெருக்கடியை சமாளிக்க ஆலயத்தின் அருகே, 1.22 ஏக்கர் நிலத்தை நன்கொடை, நெடுஞ்சாலை இழப்பீட்டு பணம், ஆலயத்தின் வரவு உள்ளிடவற்றில் இருந்து வாங்கினோம். அதன்பின் கப்புச்சின் சபை பாதிரியார்கள் நிர்வாகம் மீதான அதிருப்தியால், அந்த சபையை நீக்கி, மீண்டும் மறை மாவட்ட பாதிரியார்கள் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டது. அந்தோணியார் ஆலயத்திற்கு வாங்கிய, 1.22 ஏக்கர் நிலத்தை, கப்புச்சின் பாதிரியார்கள் கொடுக்க மறுக்கின்றனர். எனவே அதிகாரிகள் விசாரித்து அந்த நிலத்தை பொதுமக்கள் வழிபாடு நடத்தவும், ஆலய பயன்பாட்டிற்கு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தொடர்ந்து ஆலய நிலத்தை மீட்கக்கோரி கோஷம் எழுப்பியவாறு, கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.