/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீர்த்தமலையில் சீரான குடிநீர் வழங்க கோரி மறியல்
/
தீர்த்தமலையில் சீரான குடிநீர் வழங்க கோரி மறியல்
ADDED : ஏப் 19, 2025 02:12 AM
அரூர்::அரூர் அடுத்த தீர்த்தமலையில், சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை பஞ்.,ல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள தோப்பு பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த, சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகம் மற்றும் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை, 10:30 மணிக்கு, முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, அரூர்-திருவண்ணாமலை சாலையில், காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நித்யா ஒரு சில நாட்களில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 12:00 மணிக்கு கலைந்து சென்றனர்.
தீர்த்தமலை பஞ்.,க்கு உட்பட்ட பொய்யப்பட்டி, கட்டரசம்பட்டி, குரும்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு முறையாக ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்படுவதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.