/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி மறியல்
/
விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி மறியல்
ADDED : மார் 17, 2025 03:38 AM
காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, மூதாட்டி இறந்த விவகாரத்தில், -விபத்து ஏற்படுத்தியவரை கைது செய்யக்கோரி, உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பல்லேனஹள்ளிபு-துாரை சேர்ந்தவர் அய்த்தா, 65. இவர் கடந்த, 12-ல் இரவு, 7:00 மணிக்கு பழையூர் சாலையில் நடந்து சென்றபோது, அடை-யாளம் தெரியாத வாகனம் மோதி
படுகாயமடைந்தார்.
தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவி-னர்கள் விபத்து ஏற்படுத்தியவரை உடனே கைது செய்யக்கோரி, காரிமங்கலம் - பாலக்கோடு நெடுஞ்சாலை, அனுமந்தபுரம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவ-டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.