/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரயில்வே ஸ்டேஷனை மாற்றி அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே ஸ்டேஷனை மாற்றி அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2026 07:49 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே மூக்கனுாரில், 250 குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ரயில்வே ஸ்டேஷனை மாற்றி அமைக்கக்கோரி, கலெக்டர் அலுவலகம் அருகே, கிராம மக்கள் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூக்கனுார், தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் அப்பாபிள்ளை தலைமை வகித்தார். கம்யூ., கட்சி நிர்வாகிகள் பேசினர்.
இது குறித்து, மூக்கனுாரை சேர்ந்த சிலம்பரசன் கூறியதாவது:
தர்மபுரி - -மொரப்பூர் ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கிறது. இந்நி-லையில், தர்மபுரி அடுத்த மூக்கனுார் கிரா-மத்தில், பழைய ரயில்வே ஸ்டேஷன் இருந்த இடத்தில் மீண்டும் அமைத்தால், 250 வீடுகள் அகற்றப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்-கப்படும். எனவே குடியிருப்பில் இருந்து, 200 மீட்டர் தள்ளி ஸ்டேஷனை அமைத்தால், பெரிய பாதிப்பு இருக்காது.
இதற்கு கடந்த, 2024ல் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது. இந்நிலையில் சிலர், மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து, பழைய ரயில்வே ஸ்டேஷன் இருந்த இடத்தில், மீண்டும் அமைக்க, மக்களை துாண்டி விட்டு போராட்டம் நடத்தினர். பட்டா நில உரிமைதா-ரர்கள், நிலம் வழங்க தயாராக உள்ளோம். ஆனால், 2024ல் மாவட்ட நிர்வாகம் அறிவித்த படி, குடியிருப்பில் இருந்து, 200 மீட்டர் துாரத்தில் ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினர்.

