/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்
ADDED : ஜன 22, 2025 07:17 AM
தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் சார்பில், தர்மபுரி மாவட்டம் முழுவதும், தாசில்தார் அலுவலகம் முன், நேற்று சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
தர்மபுரியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுசிலா மற்றும் நிர்வாகிகள் பேசினர். இதில், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை ஆந்திரா மாநிலத்தை போல, 6,000, 10,000, 15,000 ரூபாய் என உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் உதவித்தொகையை அனைவருக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில், 50 சதவீதம், 4 மணி நேரம் பணி என்ற பழைய நிலையை தொடர வேண்டும். அனைத்து சலுகைகளை ஒருங்கிணைத்து, ஒரே தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், போராட்டத்தில் ஈடுபட்ட, 180 பேரை போலீசார் கைது செய்தனர்.
* அரூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மாநில செயலாளர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட, 85 பேரை அரூர் போலீசார் கைது செய்தனர்.