/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
/
வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : டிச 05, 2025 11:18 AM

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பே.தாதம்பட்டியில், 1,000க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் வசிக்-கின்றனர். இவர்களில் பலர் கூட்டு குடும்பங்க-ளாக வசிக்கின்றனர். பலர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். எனவே, அக்கிராமத்தில் தங்களுக்கு அரசால் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதில், 60 குடும்பத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். இவர்-களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கேட்டு, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்-கத்தின் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தில், வட்ட தலைவர் விஜி தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க, மாவட்ட செயலாளர்கள் முத்து, வட்ட செய-லாளர் கணேசன் ஆகியோர் பேசினர். கூட்-டத்தில் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

