தர்மபுரி: குறைந்தபட்ச ஓய்வூதியம் ஊதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் அங்கம்மாள் தலைமை வகித்தார்.
சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஜீவா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட அமைப்பாளர் காவேரி நிர்வாகிகள் கருணாநிதி, இளவரசி, மல்லிகா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், 7,850 ரூபாய் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத்தொகை, 500- உயர்த்தி, 3,000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஈமசடங்கு தொகை, 25,000 வழங்க வேண்டும். மாத இறுதி வேலை நாளில், ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளில் அனைத்து பண பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.