/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பயன்பாடின்றி உள்ள முன்மாதிரி பயணிகள் நிழற்கூடம்
/
பயன்பாடின்றி உள்ள முன்மாதிரி பயணிகள் நிழற்கூடம்
ADDED : ஜூன் 21, 2024 07:19 AM
தர்மபுரி: தர்மபுரியில், தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், முன்மாதிரி நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிழற்கூடத்தில், இச்சாலை வழியாக செல்லும் ஊர்கள், பஸ் விபரம், ஊர்களின் துாரம் உள்ளிட்ட அறிவிப்பு பலகைகள் இருந்தன. பிளாஸ்டிக் கூரை அமைத்தும், பயணிகள் அமர ஸ்டீஸ் சேர்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடந்த, 6 ஆண்டு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த நிழற்கூடங்களில், தற்போது, கூரைகள் பெயர்ந்தும், பயணிகள் அமரும் ஸ்டீல் சேர்கள் உடைந்து தொங்கியும் காணப்படுகிறது. கூரைகள் பெயர்ந்துள்ளதால், மழை மற்றும் வெயில் நேரங்களில் இதனடியில் பயணிகள் நிற்கக்கூட முடியாத நிலை உள்ளது. மேலும், சினிமா போஸ்டர்கள், கடைகள் உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டும் இடமாக, முன்மாதிரி நிழற்கூடம் மாறி விட்டது. இதனால், பஸ்சிற்கு காத்திருக்கும் பயணிகள், நிழற்கூடத்தை தவிர்த்து, சாலையிலேயே நின்று காத்திருந்து, பஸ் ஏறி பயணிக்கின்றனர். பயன்பாடின்றி உள்ள முன்மாதிரி பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து கொடுக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

