/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கல்வி உதவித்தொகை ரூ.28.55 லட்சம் வழங்கல்
/
கல்வி உதவித்தொகை ரூ.28.55 லட்சம் வழங்கல்
ADDED : மார் 22, 2024 07:07 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, ஐ.வி.டி.பி., கூட்டமைப்பு பணியாளர்களில், 3 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும், 164 பணியாளர்களின், 287 குழந்தைகளுக்கு, 28.55 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகையை, ஐ.வி.டி.பி., நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
சுண்டம்பட்டி விடிவெள்ளி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் மைய பொறுப்பாளர் ஜேசுராஜ், ஐ.வி.டி.பி., பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்கினார். ஐ.வி.டி.பி., நிர்வாக உறுப்பினர்கள் ஜோஷ்வா சைமன், நந்தினி ஜோஷ்வா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதுவரை, ஐ.வி.டி.பி., கூட்டமைப்பு பணியாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகையாக, 1.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக, ஐ.வி.டி.பி., நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

